இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நடைபெற இருந்த ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரத்து செய்யப்பட்டதாக சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பிசியோதெரபி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்திய கிரிக்கெட் வீரர்கள் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்றாலும் இருநாட்டு கிரிக்கெட் போர்டு அதிகாரிகள் ஆலோசனை செய்து இந்த போட்டியை பாதுகாப்பு காரணங்களுக்காக ரத்து செய்து உள்ளனர்.
இந்திய வீரர்களால் ஒரு அணியைக் களமிறக்க முடியவில்லை என்பதால்தான் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் ஆங்கில நாளேடுகள் எப்போதும் இந்திய வீரர்களையே பொறுப்பேற்க செய்வார்கள். இந்திய வீரர்கள் போட்டியை விளையாட மறுத்துவிட்டார்கள் என்று தெரிவிக்கும் அறிக்கைகள் ஆங்கில செய்தித்தாள்களில் மட்டுமே உள்ளன. அவர்கள் இந்திய அணியைப் பற்றி நல்ல விதமாக எழுதவே மாட்டார்கள். இந்திய வீரர்கள் 5 வது டெஸ்ட் விளையாட மறுத்ததை நான் ஒருபோதும் நம்ப மாட்டேன். எனக் கூறியுள்ளார்.