ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி நாளை தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. இதில் முதல் டெஸ்ட்டுக்கு மட்டுமே கோலி தலைமை தாங்குவார். அதன் பிறகு அவர் தனது மனைவியின் பிரசவத்துக்காக இந்தியா திரும்ப உள்ளார். இதனால் மீதமுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கும் ரஹானே கேப்டனாக்க செயல்படவுள்ளார்.