மீண்டும் வேகமாக பரவும் கொரோனா: கல்லூரிகள் மூடப்படுமா?

புதன், 16 டிசம்பர் 2020 (09:36 IST)
கொரனோ வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் சமீபத்தில் இறுதியாண்டு கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டன 
 
இந்த நிலையில் சென்னை ஐஐடி மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர்கள் சிலருக்கும் ஊழியர்களுக்கும் கொரனோ தொற்று உறுதியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இதனை அடுத்து மாநிலம் முழுவதும் உள்ள கல்லூரி விடுதிகளிலும் கல்லூரிகளிலும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது
 
அண்ணா பல்கலைக்கழகத்தில் 650 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஆறு பேருக்கு கொரனோ தொற்று உறுதியாகி உள்ளதாக தெரிகிறது. அடுத்தடுத்து மாணவர்களுக்கு கொரனோ தொற்று பரவி வருவதால் சக மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே அச்சம் ஏற்பட்டுள்ளதால் கல்லூரிகள் மீண்டும் மூட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்