உலகக்கோப்பை டி20 போட்டி: 172 இலக்கை நோக்கி விளையாடும் இலங்கை

ஞாயிறு, 24 அக்டோபர் 2021 (18:10 IST)
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இன்றைய முதல் போட்டியாக வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது
 
ஷார்ஜாவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி  20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்துள்ளது. முகமது நசீம் மிக அபாரமாக விளையாடி அரை சதம் அடித்துள்ளார். ரஹீம் 57 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை அணியை பொறுத்தவரை கருணரத்னே, பெர்னாண்ட்டொ மற்றும் லஹிரு குமாரா தல ஒரு விக்கெட்டை எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இலங்கை அணி 172 என்ற இலக்கை நோக்கி விளையாடி வருகிறது என்பதும் சற்றுமுன் 9 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் எடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
மேலும் இன்றைய 2வது போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை செய்ய உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்