சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் ஸ்ரீரெட்டியா? ஆச்சர்யத்தில் திரையுலகம்!

வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (10:41 IST)
நடிகை ஸ்ரீரெட்டி தான் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

தெலுங்கு திரையுலகில் அடுக்கடுக்காய் பல இயக்குனர்கள், நடிகர்கள் மீது தொடர்ச்சியாக பாலியல் குற்றச்சாட்டைக் கூறி பரபரப்பை கிளப்பினார். இதனால் அவரை தெலுங்கு சினிமா உலகினர் ஓரங்கட்டிவிட சென்னைக்குள் தஞ்சம் புகுந்தார் ஸ்ரீரெட்டி. பின்னர் தமிழ் சினிமாவிலும் இயக்குநர் முருகதாஸ், சுந்தர்.சி, ராகவா லாரன்ஸ் பற்றியும் தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை முன் வைத்திருந்தார். மேலும் சக நடிகைகளையும் அவர் மோசமாக விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில் இப்போது அவர் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் சில்க் ஸ்மிதாவின் பயோபிக்கில் தான் நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த படத்தை விளம்பர பட இயக்குனர் மது என்பவர் இயக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

ஏற்கனவே தயாரிப்பாளரும் பத்திரிக்கையாளருமான சித்ரா லட்சுமணன் அவள் அப்படிதான் என்ற பெயரில் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை படமாக எடுக்கப்போவதாக அறிவித்துள்ளார். அந்த படத்தை கண்ணா லட்டு திண்ண ஆசையா பட இயக்குனர் மணிகண்டன் இயக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு, இப்போது கதாநாயகி தேடும் படலம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்