விக்கெட் தாகத்தில் தவித்த இந்தியா; கடைசி கட்டத்தில் தடுமாறிய தென் ஆப்பரிக்கா

சனி, 13 ஜனவரி 2018 (21:16 IST)
தென் ஆப்பரிக்கா - இந்தியா அணிகள் இடையே நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டி முதல் நாள் முடிவில் தென் ஆப்பரிக்க அணி 6 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்கள் குவித்தது.

 
இந்திய அணி தென் ஆப்பரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. கேப் டவுனில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது. இன்று இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது.
 
டாஸ் வென்ற தென் ஆப்பரிக்க அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பரிக்க அணி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. இந்திய அணி பந்துவீச்சாளர்கள் விக்கெட வீழ்த்த முடியாமல் தவித்து வந்தனர். உணவு இடைவெளிக்கு பின் ஒவ்வொருவராக அவுட் ஆகினர்.
 
முதல்நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பரிக்க அணி 6 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்கள் குவித்துள்ளது. மார்க்ரம் 94 ரன்கள் குவித்தார். ஆம்லா 82 ரன்கள் குவித்தார். இந்திய அணி சார்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்