ஆஸி அணியின் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் சமீபகாலமாக மோசமான ஆட்டத்திறனால் பாதிக்கப்பட்டார். இதன் காரணமாக தான் தலைமை ஏற்று கோப்பையை வென்று கொடுத்த ஐபிஎல் அணியில் இருந்து நீக்கப்பட்டு மைதானத்துக்குள்ளே கூட வரமுடியாத அளவுக்கு மோசமாக நடத்தப்பட்டார். ஆனால் உலகக்கோப்பை தொடரில் விஸ்வரூபம் எடுத்து 7 இன்னிங்ஸ்களில் 289 ரன்களை சேர்த்து தொடர் நாயகன் விருதைப் பெற்றுள்ளார்.
இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் வார்னருக்கு விருது கொடுக்கப்பட்டதற்கு தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். அவர் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசமுக்குதான் கொடுக்கப்படும் என எதிர்பார்த்ததாகக் கூறியுள்ளார். பாபர் ஆசம் இந்தம் தொடரில் 303 ரன்கள் சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.