வங்கதேச அணி நிர்வாகத்தோடு சம்பள உயர்வு தொடர்பாக முரன்பட்ட வீரர்கள் ஷகீப் அல் ஹசன் தலைமையில் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் அவர் சூதாட்ட புக்கிகள் அவரைத் தொடர்பு கொண்டதை ஐசிசியிடம் தெரிவிக்கவில்லை எனறு ஓராண்டு தடையும் மற்றொரு வங்கதேச அணியுடனான பிரச்சனைக்காக ஓராண்டு இடைநிறுத்த தண்டனையும் அளிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து இப்போது டாக்கா பிரிமீயர் லீக் போட்டியில் விளையாடி வரும் மற்றொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். இது சம்மந்தமாக வெளியான வீடியோவில் ஷகிப் அல் ஹசன் தன் பந்து வீச்சில் எல் பி டபுள்யு விக்கெட் கேட்க, நடுவர் தராததால் ஆத்திரத்தில் ஸ்டம்ப்களை எட்டி உதைத்து அவரை மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். மேலும் மழை வருவது போல இருக்க நடுவர் போட்டியை நிறுத்த அப்போதும் ஸ்டம்ப்புகளைப் பிடுங்கி நடுவரை அடிப்பது போல பேசினார். இது சம்மந்தமான வீடியோ வைரலாக அவருக்குக் கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என கிரிக்கெட் ரசிகர்கள் கொந்தளித்தனர்.
இந்நிலையில் வங்கதேச கிரிக்கெட் வாரியம் அவருக்கு அடுத்த 3 போட்டிகளில் விளையாட தடையும்., 5 லட்சம் டாக்கா (6000 அமெரிக்க டாலர்கள்) அபராதமும் விதித்துள்ளது.