ஓய்வு முடிவை அறிவித்தார் செரீனா வில்லியம்ஸ்: ரசிகர்கள் அதிர்ச்சி!
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (22:12 IST)
உலகின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் தனது ஓய்வு முடிவை எடுத்துள்ளதாக அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
40 வயதாகும் செரினா வில்லியம்ஸ் இருபத்திமூன்று கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனை செய்துள்ளார் என்பதும் 4 ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
ஓய்வு முடிவு குறித்து அவர் கூறுகையில் வாழ்க்கையில் வேறு ஒரு திசையில் செல்ல நான் முடிவு செய்துள்ளேன். எனவே அதிகமாக நேசிக்கும் ஒன்றை விட்டு விட்டு விலகும் போது கடினமாக தான் இருக்கும். ஆனாலும் ஓய்வு பெறும் வயது வந்துவிட்டது என்று அவர் தெரிவித்துள்ளார்
நான் ஒரு அம்மாவாக கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஓய்வு என்ற வார்த்தை எனக்கு பிடிக்காத வார்த்தை என்றும் அவர் தெரிவித்துள்ளார்
செரினா வில்லியம்ஸ் ஓய்வு முடிவை அறிவித்ததை அடுத்து அவரது ரசிகர்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.