இந்தியாவின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பிசிசிஐ தலைவராக ஒரு மனதாகப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதையடுத்து பதவி ஏற்றதை அடுத்து அவர் முதன் முதலாக நேற்று கொல்கத்தா சென்றார். அப்போது விமான நிலையத்தில் கூடியிருந்த மேற்கு வங்க கிரிக்கெட் சங்க நிர்வாகிகளும் கிரிக்கெட் ரசிகர்களும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘1996 ஆம் ஆண்டு எனது முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த பின், கொல்கத்தா வந்த போது கிடைத்த அதே உற்சாகமான வரவேற்பை இப்போது உணர்கிறேன். இந்திய அணியின் செயல்பாடுகள் இப்போது திருப்திகரமாக உள்ளன. உலக கோப்பை போன்ற பெரிய போட்டிகளில் வெல்ல வேண்டும் என்பதை தான் முக்கியமான விஷயமாக கருதுகிறேன். ’ எனத் தெரிவித்துள்ளார்.