உசேனுக்கு ஒரு நியாயம்? சாந்திக்கு ஒரு நியாயமா? இயக்குனர் கேள்வி!

செவ்வாய், 16 மார்ச் 2021 (12:24 IST)
தடகள வீராங்கனை சாந்தியின் பயோபிக் எடுக்கும் இயக்குனர் ஜெயசீலன் தவச்செல்வி படம் குறித்து பேசியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சாந்தி என்ற தடகள வீராங்கனை சர்வதேச அளவிலான போட்டிகளில் 11 பதக்கங்களையும், தேசிய அளவிலான போட்டிகளில் 50-க்கும் மேற்பட்ட பதக்கங்களையும் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்தவர். ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்றார்.

ஆனால் அவருக்கு உடலில் டெஸ்டோஸ்டிரான் அதிகமாக சுரப்பதால்  பாலியல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அவரிடம் இருந்து பதக்கங்கள் யாவும் பறிக்கப்பட்டன. மேலும் தான் பெண் என்று நிருபிக்க 9 ஆண் மருத்துவர்கள் அடங்கிய குழுவின் முன்னர் அவர் நிர்வாணமாக்க்கப்பட்டு துன்புறுத்தப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதுவரை அவருக்கான நீதிக் கிடைக்கப்படவே இல்லை. இந்நிலையில் இப்போது அவரின் போராட்ட வாழ்வை மையமாக வைத்து சாந்தி சௌந்தர்ராஜன் என்ற படத்தை இயக்குனர் ஜெயசீலன் இயக்க உள்ளார். இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்க, ரசுல் பூக்குட்டி ஒலிப்பதிவு செய்ய உள்ளார்.

இந்த படம் பற்றி பேசியுள்ள இயக்குனர் ஜெயசீலன் ‘உசேனுக்கு இயற்கையிலேயே நுரையீரல் செயல்படும் திறன் அதிகமாக இருந்தது. ஆனால் அதை ஏற்றுக்கொண்ட சமூகம், சாந்தியின் இயற்கையான டெஸ்டோஸ்டிரான் அளவு அதிகமாக இருப்பதை மட்டும் ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்