இரத்த ஓட்டத்தை சீராக்க உதவுமா பிஸ்தா பருப்பு...?

செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (00:57 IST)
பிஸ்தா பருப்பில் வைட்டமின் ஏ மற்றும் இ போன்ற சத்துக்கள் உள்ளதால் இரத்த நாளங்களை பாதுகாக்கும். இரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரித்து, செல்களுக்கு ஆக்ஸிஜனையும் கொடுக்கிறது.
 
பிஸ்தா பருப்பில் உள்ள துத்தநாகம் உடலின் நோயெதிர்ப்புத் சக்தியை அதிகரிக்கிறது. பிஸ்தா பருப்பை கர்ப்ப காலத்தில் சாப்பிடுவது கர்ப்பிணிகளின் உடலுக்குத் தேவையான மற்றும் முக்கியமான பல ஊட்டச்சத்துக்களைக் தருகிறது.
 
பிஸ்தா பருப்பில் வைட்டமின் பி6 இரத்தத்தில் வெள்ளையணுக்களின் உற்பத்திக்கு மிகவும் அவசியமானது. செல்களுக்கு ஆக்ஸிஜனை அளித்து, வெள்ளை மற்றும் சிவப்பு ரத்த அணுக்களை உற்பத்தி செய்து மண்ணீரல் மற்றும் நிணநீரைப் பராமரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
 
பிஸ்தாவில் உள்ள வைட்டமின் பி6 ஆக்ஸிஜனை, ரத்த ஓட்டம் வழியாக செல்களுக்கு கொண்டு சேர்ப்பது மட்டுமல்லாமல், ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கவும்  செய்கிறது.
 
பிஸ்தா பருப்பை சூடான பாலில் ஊறவைத்து தினமும் மாலையில் சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும். பிஸ்தாவில் உள்ள வைட்டமின் ஈ ஆனது,  புறஊதாக் கதிர்களால் தோல் பாதிக்கப்படாமல் இருக்கவும், தோல் புற்றுநோய் வராமல் இருக்கவும் உதவுகிறது.
 
பிஸ்தாவில் உள்ள சியாசாந்தின், லூட்டின், கரோட்டினாய்டுகள் கண்ணின் விழித்திரையைப் பாதுகாக்கிறது. பிஸ்தா சாப்பிடுவதால், உடலில் உள்ள கெட்ட  எல்.டி.எல் கொழுப்பைக் குறைக்கிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்