எப்பொழுதும் வாக்குவாதம் தேவையில்லை; தோனியை போல் அமைதியாகவும் இருக்கலாம்: சஹா பேட்டி!!

செவ்வாய், 8 ஆகஸ்ட் 2017 (19:07 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் விக்கெட் கீப்பர் சஹா, முன்னாள் கேப்டன் தோனி போல கூலாகதான் இருப்பேன் என்று கூறியுள்ளார்.


 
 
தோனி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, சிறந்த விக்கெட் கீப்பர் டெஸ்ட் போட்டிகளுக்கு கிடைக்கவில்லை.  ஆனால், தற்போது விக்கெட் கீப்பர் சஹா தோனியில் இடத்தை ஓரளவு பூர்த்தி செய்கிறார்.
 
சஹா சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்துயுள்ளார். அதில் அவர் கூறியதாவது, விக்கெட் கீ்ப்பராக இருப்பவர்கள எதிரிணி பேட்ஸ்பேனுடன் அடிக்கடி வாக்குவாதம் செய்வார்கள். ஆனால், அப்படி இருக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. தோனி மாதிரி அமைதியாக கீப்பிங் செய்வே ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்