இந்தியா – ஆப்கானிஸ்தான் இடையேயான உலக கோப்பை போட்டி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆப்கானிஸ்தானுடன் விளையாடிய இந்திய அணி மிகுந்த சிரமப்பட்டே வெற்றியை பெற்றது. இது குறித்து கருத்து தெரிவித்த இந்திய முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் “இந்தியாவின் ஆட்டம் இன்று மோசமாக அமைந்திருந்தது. தோனி, கேதர் ஜாதவ் கூட்டணி ரொம்ப சுமாராகவே விளையாடினார்கள். மிடில் பேட்ஸ்மேனான தோனி 52 பந்துகளில் 28 ரன்கள் எடுப்பது மிகவும் மோசமானது. தோனி தனது பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டும்” என கூறினார்.
இது சமூக வலைதலங்களில் வைரலானது. ரசிகர்கள் பலர் சச்சினை திட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். சச்சினின் முந்தைய ஆட்டங்கள் குறித்தும் விமர்சித்தனர்.
இந்நிலையில் நேற்று வெஸ்ட் இண்டீசுடன் இந்திய ஆடிய ஆட்டத்தில் அபார வெற்றி பெற்றது. அப்போது ஆட்டநாயகன் விருதை பெற்ற இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி “தோனிக்கு அவரது பொறுப்பு என்னவென்று தெரியும். அவர் ஒரு போட்டியில் சுமாராக விளையாடிவிட்டதால் பலர் அவரை மோசமாக பேசி வருகிறார்கள்” என மறைமுகமாக சச்சினை திட்டியுள்ளார்.
தற்போது வெஸ்ட் இண்டீஸை வெற்றிபெற்றதுக்கு இந்தியாவிற்கு வாழ்த்துகள் கூறி வெளியிட்ட சச்சின் “வெஸ்ட் இண்டீஸின் கடுமையான பந்துவீச்சை இந்திய கிரிக்கெட் வீரர்கள் அற்புதமாக சமாளித்தார்கள். நேற்றைய ஆட்டத்தில் கோலி-தோனி கூட்டணி அபாரமாக ஆடியது. முக்கியமாக தோனி கடைசி ஓவரில் 16 ரன்கள் எடுத்தது வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தியது” என புகழ்ந்து பேசியுள்ளார்.