இரவு-பகல் போட்டியில் சமரசமே இருக்க கூடாது! - சச்சின் டெண்டுல்கர்

வியாழன், 21 நவம்பர் 2019 (17:53 IST)
இந்தியாவில் முதன்முறையாக நடைபெற இருக்கும் பகல் – இரவு ஆட்டத்தில் சமரசமே காட்டக்கூடாது என சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

இந்தியா வங்கதேசத்துக்கு இடையே நடந்து வரும் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை நடைபெற இருக்கிறது. இதுவரை இந்தியா விளையாடிய ஆட்டங்களிலேயே இது மிகவும் வித்தியாசமான ஒரு ஆட்டமாகும். முதன்முதலாக இந்திய வீரர்கள் பகல்- இரவு ஆட்டத்தில் விளையாட இருக்கிறார்கள். வங்கதேசத்துக்குமே இது புதியதுதான்! மேலும் இதில் பிங்க் நிற பந்து பயன்படுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சச்சின் டெண்டுல்கர் ”உலக நாடுகள் பல பகல் – இரவு ஆட்டங்களுக்கு மாறி வரும் நிலையில் இந்தியாவும் அதற்கு பழகிக்கொள்ள வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. மேலும் இரவு ஆட்டத்தில் பனிப்பொழிவு, பந்து வீச்சின் வேகம் குறைதல், வீரர்களின் சோர்வு போன்ற பல காரணிகளும் உள்ளன. ஆனால் அவற்றையெல்லாம் தாண்டி எந்தவித சமரசமும் இன்றி விளையாட வேண்டும்.

பார்வையாளர்களையும் மைதானத்து கொண்டு வர வேண்டும். அதுவும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விஷயமே!” என கூறியுள்ளார்.

இந்திய அணிக்கே முற்றிலும் புதுமையாக இருக்க போகும் இந்த ஆட்டத்தை காண கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்