சச்சினை 13 முறை அவுட் செய்திருக்கிறேன்… அக்தர் ஓபன் டாக்.. நெட்டிசன்ஸ் கலாய்
வெள்ளி, 17 ஏப்ரல் 2020 (19:27 IST)
பாகிஸ்தான் கிரிகெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான அக்தர், தான் சச்சினை 12- 13 முறை அவுட் செய்துள்ளதாக தெரிவித்துள்ளதற்கு நெட்டிசன்கள் பலரும் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.
ஒரு சமூதளப் பக்கத்தில் தனது நினைவுகளைப் பகிர்ந்துள்ள அக்தர், அதில்,பல வி்ளையாட்டு வீரர்களுடனான தனது அனுபவங்களை பற்றி தெரிவித்துள்ள அவர், உலகில் தலைசிறந்த வீரர் சச்சின் எனவும், அவரை 12 -13 முறை அவுட் செய்திருப்பேன் என தெரிவித்தார்.
ஆனால், உண்மையில் அக்தர் சச்சினை 8 முறை மட்டும்தான் அவுட் செய்துள்ளார் என்பதால் அக்தரின் பேச்சை பலரும் கலாய்த்து வருகின்றனர்.