ரோஹித் சர்மா இந்திய அணியில் இருந்தும் நீக்கப்படலாம்: முன்னாள் வீரர் கருத்து!

வியாழன், 7 ஏப்ரல் 2022 (18:54 IST)
ரோகித் சர்மா இந்திய அணியில் இருந்து நீக்கப்படலாம் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
ரோகித் சர்மா கடந்த மூன்று ஐபிஎல் போட்டிகளில் ஃபார்மில் இல்லாமல் மிக குறைந்த ரன்களில் அவுட் ஆகி வருகிறார். இதே ரீதியில் அவர் இருந்தால் அவர் மும்பை அணியில் இருந்து மட்டுமின்றி இந்திய அணியில் இருந்தும் நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்
 
ரோகித் சர்மா தனது திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது
 
மும்பை அணி இதுவரை 3 போட்டிகளில் விளையாடி மூன்றிலும் தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்