ஆரம்பத்தில் நிதானமான வெளிப்படுத்திய ரோகித் சர்மா சதம் அடித்த பின்னர் ஆடிய தொடங்கினார். லக்மல் வீசிய ஓவரில் 4 சிக்ஸர் விளாசினார். கடைசி வரை களத்தில் நின்ற ரோகித் இரட்டை சதம் அடித்து 208 ரன்கள் குவித்தார். இது ரோகித் சர்மாவுக்கு மூன்றாவது இரட்டை சதம். தவான் ஆட்டமிழந்த பின்னர் ஷிரியாஸ் ஐயர் அதிரடியாக ஆடி ரோகித் சர்மாவுக்கு நல்ல கூட்டணியாக அமைந்தார்.
88 ரன்கள் குவித்த ஷிரியாஸ் ஐயர் ஆட்டமிழந்த களமிறங்கிய தோனி 7 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா 8 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். தற்போது இந்திய அணி இலங்கைக்கு அணிக்கு மிகவும் கடினமாக இலக்கை கொடுத்துள்ளது. 393 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ர இலக்குடன் இலங்கை அணி விளையாட உள்ளது.