இந்தியாவில் ஜியோ நிறுவனம் 4ஜி குரல் வழி மற்றும் இணையதள செவையை இலவசமாக அறிமுகம் செய்ததன் மூலம் தொலைத்தொடர்பில் புரட்சி ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து முன்னணி நிறுவனங்களான ஏர்டெல், வோடோபோன் ஆகியவை 4ஜி சேவையின் கட்டணங்களை குறைக்க தொடங்கியது.
தற்போது ஜியோ நிறுவனம் சலுகை விலையில் கட்டண சேவையை வழங்கி வருகிறது. ஏர்டெல், வோடோபோன், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்களும் ஜியோவுக்கு நிகராக போட்டிப்போட்டு சலுகைகளை வழங்கி வருகின்றன.
ஜியோ 4ஜி சேவையை இலவசமாக வழங்கியபோது, ஜியோவை விட எங்கள் தொடர்பில்தான் இணையதள வேகம் அதிகமாக உள்ளது என ஏர்டெல் கூறிவந்தது. இதைத்தொடர்ந்து டிராய் வெளியிட்ட அறிக்கையில் ஜியோ நிறுவனம்தான் அதிகளவில் இணையதள வேகம் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது.