இந்தநிலையில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் களமிறங்குவார் என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் ரிஷப் பண்ட் களமிறங்குகிறார் என்றும் பந்துவீச்சில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் சென்னை மைதானம் பேட்டிங்கிற்கு இருக்கும் சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் பேட்டியில் தெரிவித்துள்ளார்