உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் கோலி, அவர் ரிச்சர்ட், இம்ரான் கானை நினைவுபடுத்துகிறார் என இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரவிசாஸ்திரி கூறியதாவது:
நான் சிறந்த கிரிக்கெட் வீரரை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன். கடந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை அவர் பெற்றுள்ளார்.அவர் சிறந்த வீரர். டெஸ்ட் வீரர், ஒருநாள் போட்டி வீரர் என 3 ஐசிசி விருதுகளை பெற்றவர் என்ற சாதனை படைத்தார் கோலி.
பயிற்சி பெருவது, ஒழுக்கம், தியாகம் , விருப்பங்களை தவிர்ப்பது என அனைத்திலும் கோலிக்கு நிகர் இல்லை. அவர் தனது சொந்த வழியிலேயே அணியை முன்னெடுத்து தாங்குகிறார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.