ராஜஸ்தான் அணி அபார வெற்றி: லக்னோவை பின்னுக்கு தள்ளியது
திங்கள், 16 மே 2022 (07:05 IST)
ராஜஸ்தான் அணி அபார வெற்றி: லக்னோவை பின்னுக்கு தள்ளியது
ஐபிஎல் தொடர் கிரிக்கெட் தொடர் போட்டியில் நேற்று ராஜஸ்தான் மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது
இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது இதனையடுத்து 179 என்ற இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ அணி 8 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் லக்னோ 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது
மிக அபாரமாக பந்து வீசிய டிரென்ட் போல்ட் நேற்று ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். நேற்றைய வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி 16 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்து லக்னோ அணியை பின்னுக்கு தள்ளியது
லக்னோ அடிப்படையில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.