கோலி, புஜாரா சதத்தால் தப்பிய இந்திய அணி

வியாழன், 17 நவம்பர் 2016 (15:33 IST)
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி தொடக்கத்திலே இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கோலி மற்றும் புஜாராவின் சதத்தால் தற்போது இந்திய அணி சற்று வலுவான நிலையில் உள்ளது.


 

 
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி டிராவில் முடிந்தது. இரண்டாவது போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் தொடங்கியது.
 
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 22 ரன்கள் எடுத்த நிலையில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் கோலி, புஜாரா இருவரும் நிதானமாக விளையாடி ரன் குவித்தனர். இதனால் இந்திய அணி சற்று வலுவான நிலையை அடைந்தது.
 
புஜாரா இங்கிலாந்து வீரர்களின் பந்து வீச்சை அடித்து நொறுக்கினார். இருவரும் சதம் அடித்தனர். தற்போது இந்திய அணி 3 விக்கெட் இழப்பிறகு 255 ரன்கள் எடுத்துள்ளது.
 
புஜாரா 119 ரன்கள் எடுத்த நிலையில் ஆடமிழந்தார். விராட் கோலி 115 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்