இந்திய வீரர்கள் தங்கியிருந்த ஓட்டல் அருகே விமான விபத்து: ஆஸ்திரேலியாவில் பரபரப்பு!

ஞாயிறு, 15 நவம்பர் 2020 (09:44 IST)
இந்திய வீரர்கள் தங்கியிருந்த ஓட்டல் அருகே விமான விபத்து

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது என்பதும் அந்நாட்டில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 

 
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் யாருக்கும் கொரோனா பாசிட்டிவ் இல்லை என்பது உறுதியாகி உள்ளது 
 
நவம்பர் 27ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே ஒரு நாள் போட்டிகள் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இரு அணிகளும் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் 
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னியில் இந்திய வீரர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு மிக அருகில் விமான விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்திய வீரர்கள் தங்கி உள்ள ஓட்டலில் இருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில் விமான விபத்து இன்று அதிகாலை 4:30 மணிக்கு ஏற்பட்டதாகவும் ஆனால் இந்திய வீரர்கள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது
 
இருப்பினும் இந்த விமான விபத்து காரணமாக அந்த பகுதியில் உள்ள பல கிலோ மீட்டர் தூரத்திற்கு புகை மண்டலமாக காட்சி அளிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்திய வீரர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல் அருகே விமான விபத்து ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்