ஒரே நாளில் 1.56 லட்சம் பேர் பாதிப்பு: அமெரிக்காவில் கோரத்தாண்டவமாடும் கொரோனா

ஞாயிறு, 15 நவம்பர் 2020 (07:11 IST)
அமெரிக்கால் மிக மிக மோசமான உச்சத்தில் கொரோனா வைரஸ் பரவி வருவது அந்நாட்டு மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 1,56,785 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு பின்னர்தான் மிக அதிக பாதிப்பு என்று கூறப்படுகிறது
 
உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு 5,43,11,615 என்றும், உலக நாடுகளின் கொரோ மரணங்கள் எண்ணிக்கை 13,17,396 என்றும் தகவல் வெளிவந்துள்ளது. உலக நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 3,78,61,884 என்றும் உல்க சுகாதாரத்துறை அறிவித்துள்ளது
 
இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 41,659 என்றும், இத்தாலியில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 37,255 என்றும் பிரான்ஸ் நாட்டில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 32,095 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
நேற்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,912 பேருக்கு என்பதும், 2,494 பேர் டிஸ்சார்ஜ் என்பதும் கொரோனாவால் நேற்று மட்டும் 12 பேர் உயிரிழப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்