202 ரன்கள் இலக்கு, 59 ரன்னில் ஆல்-அவுட்.. மோசமான தோல்வி அடைந்த ஆப்கானிஸ்தான்..!

புதன், 23 ஆகஸ்ட் 2023 (07:49 IST)
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. 
 
நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 201 ரன்கள் குவித்தது.  இமால் உல் ஹக்  61 ரன்கள் எடுத்தார். இதனை அடுத்து 202 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 59 ரன்களில் ஆட்டமிழந்தது.
 
ஆப்கானிஸ்தான் அணிகள் இரண்டு பேட்ஸ்மேன்கள் தவிர மற்ற அனைவரும் ஒற்றை இலக்கங்களில் ஆட்டம் இழந்தனர் என்பதும் இதில்  5 பேர் பூஜ்யம் ரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  
 
இந்த நிலையில்  இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெற உள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்