இனிமேல் ஐபிஎல் போட்டிகளுக்கு கட்டண சலுகை கிடையாது: சென்னை மாநகர போக்குவரத்து கழகம்..!

Mahendran

வியாழன், 23 மே 2024 (11:32 IST)
இனிமேல் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை காண செல்பவர்களுக்கு மாநகர பேருந்தில் சலுகை கிடையாது என மாநகரப் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. 
 
ஐபிஎல் போட்டிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் போட்டியின் போது சென்னை மாநகர பேருந்தில் கட்டணமில்லா பயணம் அனுமதிக்கப்பட்டது என்பதும் இதனால் போட்டியை காண செல்பவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்து பிளே ஆப் சுற்றுக்கு செல்லாத நிலையில் இனிமேல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டிகளுக்கு இலவச பயணம் கிடையாது என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. 
 
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்  குவாலிபர் 2 மற்றும் இறுதி போட்டி நடைபெற இருக்கும் நிலையில் இந்த இரண்டு போட்டிகளுக்கும் மாநகர பேருந்து தரப்பிலிருந்து எந்தவித சலுகையும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்