நியூசிலாந்து அபார வெற்றி.. அரையிறுதிக்கு தகுதி பெற்றதா?

வியாழன், 9 நவம்பர் 2023 (19:54 IST)
இன்று நடைபெற்ற இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் வலிமையாக உள்ளது. இருப்பினும் அந்த அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றதா என்பது அடுத்த இரண்டு போட்டிகளின் முடிவில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இன்றைய போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து 171 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. 172 என்ற இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி 23 ஓவர்களிலேயே இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. இதனை அடுத்து நியூசிலாந்து அணி தற்போது புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. மேலும்  0.743 என்ற ரன் ரேட் விகிதத்தில் உள்ளது.
 
இந்த ரன் ரேட்டை  தொடுவது என்பது ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு சாதாரணமானது அல்ல. ஆப்கானிஸ்தான் அணி  --0.338 என்ற ரன் ரேட்டிலும், பாகிஸ்தான் அணி 0.036 என்ற ரன் ரேட்டிலும் உள்ளதால் நியூசிலாந்து அணி கிட்டத்தட்ட அரையிறுதிக்கு தகுதி பெற்றதாகவே கருதப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்