இலங்கைக்கு வங்கதேச கேப்டன் வந்தால் கல்லால் அடிப்போம்: மேத்யூஸ் சகோதரர் எச்சரிக்கை..!

வியாழன், 9 நவம்பர் 2023 (12:09 IST)
இலங்கைக்கு வங்கதேச கேப்டன் வந்தால் கல்லால் அடிப்போம் என மேத்யூஸ் சகோதரர் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சமீபத்தில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்ற போது இரண்டு நிமிடங்களுக்குள் மைதானத்திற்குள் வரவில்லை என்று வங்கதேச கேப்டன் புகார் அளித்தார். 
 
இந்த புகாரை ஏற்றுக்கொண்ட அம்பயர் அவுட் என்று அறிவித்தார். ஆனால் மேத்யூஸ் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டபோது அந்த விளக்கத்தை அம்பயர் ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் இரண்டு நிமிடங்களுக்குள் தான் மைதானத்திற்குள் வந்துவிட்டதாக அவர் கூறியும் அவுட் கொடுத்தது கொடுத்தது தான் என்று அம்பயர் தெரிவித்தார்
 
வங்கதேச கேப்டன் மிகவும்  தரம் தாழ்ந்து நடந்து கொண்டதாக இலங்கை கேப்டன் மேத்யூஸ் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மேத்யூஸ் சகோதரர் இலங்கை ஊடகம் ஒன்று அளித்த பேட்டியில் வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் கிரிக்கெட் விளையாட இலங்கை வந்தால் கற்களை வீசு தாக்குவோம் என்று கூறியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்