மெக்சிகோ ஓபன் டென்னிஸ்: ஹாட்ரிக் சாம்பியன் ஆன நடால்!

திங்கள், 28 பிப்ரவரி 2022 (08:33 IST)
கடந்த சில நாட்களாக மெக்சிகோ ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வந்த நிலையில் இந்த போட்டியில் உலகின் மிகச்சிறந்த டென்னிஸ் வீரர்கள் மோதினார்கள் என்பது தெரிந்ததே.
 
இந்த நிலையில் மெக்ஸிகோ ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் சாம்பியன் பட்டத்தை பெற்றார். இவர் ஏற்கனவே இரண்டு முறை மெக்சிகோ ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை பெற்ற நிலையில் தற்போது மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை பெற்று சாதனை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 இதனை அடுத்து உலகெங்கும் உள்ள நடால் ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்