நான் தடுப்பூசிக்கு எதிரானவன் இல்லை… ஆனால்? ஜோகோவிச் கருத்து!

செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (16:42 IST)
ஆஸ்திரேலிய அரசு பிரபல டென்னிஸ் வீரர் ஜோகோவிச் விசா தடுப்பூசிக்கு எதிரானவர் என்ற விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார்.

ஆஸ்திரேலிய நாட்டில் நடைபெற்று வரும் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்வதற்காக முன்னணி டென்னிஸ் வீரர் ஜோகோவிச் சென்று இருந்தார். அவர் தடுப்பு ஊசி செலுத்தவில்லை என்ற காரணத்தினால் ஆஸ்திரேலிய அரசு அவருடைய விசாவை ரத்து செய்தது. ஆனாலும் இப்போது வரை அவர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை.

இந்நிலையில் அவர் மேல் வைக்கப்படும் தடுப்பூசிக்கு எதிரானவர் என்ற விமர்சனத்துக்குப் பதிலளிக்கும் வகையில் ‘நான் தடுப்பூசிக்கு எதிரானவன் இல்லை. அது சம்மந்தமான இயக்கங்களோடு தொடர்பில் இல்லை. ஆனால் ஒவ்வொரு தனிமனிதனுக்கும், எது தேவை, எது தேவையில்லை என்பது குறித்து சொல்ல உரிமை உண்டு. எனது உடலில் என்ன செலுத்த வேண்டும் என்பது குறித்து எனக்கு உரிமை உள்ளது.’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்