ஐபிஎல் 2018: மும்பை இந்தியன்ஸ் அசத்தல் வெற்றி:

வெள்ளி, 4 மே 2018 (23:32 IST)
இன்று நடைபெற்ற பஞ்சாப் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான டி-20 கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, பஞ்சாபை 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 174 ரன்கள் எடுத்தது. இதனால் 175 ரன்கள் என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது.
 
தொடக்க ஆட்டக்காரர் யாதவ் மற்றும் ரோஹித் சர்மா அதிரடி ஆட்டத்தால் மும்பை அணி  ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 176 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் மும்பை அணி 6 புள்ளிகளுக்கு உயர்ந்துள்ளது.
 
இந்த வெற்றியின் காரணமாக மும்பை அணிக்கு அடுத்த சுற்று செல்ல நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. இனிவரும் 5 போட்டிகளில் வெற்றி பெற்றால் மும்பை அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்