ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன மிட்செல் ஸ்டார்க்.. எந்த அணி எடுத்தது?

செவ்வாய், 19 டிசம்பர் 2023 (16:08 IST)
ஐபிஎல் மினி ஏலம் தற்போது துபாயில் நடைபெற்று வரும் நிலையில் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் மிக அதிக தொகைக்கு ஆஸ்திரேலியா வீரர் மிட்செல் ஸ்டார்க் ஏலம் போயுள்ளார். இவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூபாய் 24.75 கோடிக்கு ஏலம் எடுத்தது. கடந்த ஆண்டு சாம் கரணை ரூ.18.5 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்ததே அதிகபட்ச தொகையாக இருந்தது.
 
மேலும் சில ஏலம் போன வீரர்கள் குறித்து பார்ப்போம்.
 
ரூ.4.6 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டார் தில்ஷான் மதுஷங்க!
 
ரூ.20.5 கோடிக்கு பேட் கம்மின்ஸை ஏலத்தில் எடுத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. 
 
இந்திய இளம் வீரர் சிவம் மாவி லக்னோ அணியால் வாங்கப்பட்டுள்ளார்!
 
இந்திய வீரர் உமேஷ் யாதவ் குஜராத் டைட்டன்ஸ் அணியால் வாங்கப்பட்டுள்ளார்!
 
ஜெய்தேவ் உனத்கட்டை  ரூ.1 கோடிக்கு வாங்கியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி
 
 ரூ.4 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டார் ஷர்துல் தாகூர் 
 
2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் UNSOLD ஆனார் ஜோஷ் ஹேசில்வுட்
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்