அமெரிக்காவைச் சேர்ந்த குத்துச் சண்டை வீரரான மைக் டைசன் தான் விளையாடிய 58 போட்டிகளில் 50 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். மேலும் அதில் 44 போட்டிகளில் எதிராளியை நாக் அவுட் செய்து வென்றுள்ளார். மேலும் ரிங்குக்குள் சக வீரரின் காதைக் கடித்து துப்பியது உள்ளிட்ட சர்ச்சைகளிலும் இடம்பிடித்தார். 20 ஆண்டுகால சர்வதேசக் குத்துச் சண்டை வாழ்க்கையை அவர் 2005 ஆம் ஆண்டு முடித்துக் கொண்டார்.
அதன் பின்னர் சில சினிமாக்களில் தலைகாட்டிய அவர், இப்போது 15 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஒரு போட்டியில் தன்னுடைய முன்னாள் சக வீரரான, ஜோன்ஸ் ஜீனியுடன் ஒரு போட்டியில் மோத இருக்கிறார். இதனை மைக் டைசனே தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த போட்டியைக் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.