பாராலிம்பிக்கில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்களுக்கு கோலி வாழ்த்து!

செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (11:11 IST)
பாராலிம்பிக் போட்டித்தொடர் இன்று முதல் டோக்யோவில் தொடங்க உள்ளது.

மாற்றுத்திறனாளிகள் கலந்துகொள்ளும் பாராலிம்பிக் கோப்பை தொடர் இன்று முதல் செப்டம்பர் 5 ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இந்தியாவில் இருந்து 54 பேர் கொண்ட குழு 9 விளையாட்டுகளில் கலந்து கொள்கின்றன. வழக்கத்தை விட இந்த முறை இந்தியாவில் இருந்து அதிக பேர் கலந்துகொள்கின்றனர்.

இந்த வீரர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ள விராட் கோலி ‘இந்திய அணி வீரர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களால் மகிழ்ச்சி அடைகிறேன். எங்களை நீங்கள் பெருமைப்படுத்துவீர்கள் என்று நம்புகிறேன்.’ எனக் கூறியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்