வெண்கலம் வென்ற லவ்லினாவுக்கு பிரதமர், முதல்வர் வாழ்த்து!

புதன், 4 ஆகஸ்ட் 2021 (12:27 IST)
ஒலிம்பிக் குத்துசண்டை போட்டியில் அரையிறுதியில் இந்தியாவின் லவ்லினா தோல்வி அடைந்தாலும் அவருக்கு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது. இதனையடுத்து இந்தியா முழுவதும் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது
 
ஏற்கனவே இந்தியாவிற்கு ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் கிடைத்துள்ள நிலையில் மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்தியாவுக்கு வெண்கலம் பெற்றுக்கொடுத்த முன்னாள் பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்/ மகளிர் குத்துச் சண்டையில் லவ்லினாவின் வெற்றி பல இந்தியர்களையும் ஊக்குவிக்கின்றது என்றும் அவரின் உறுதித்தன்மை போற்றத் தக்கது என்றும் வெண்கலம் வென்ற லவ்லினாவுக்கு நல்வாழ்த்துக்கள் என்றும் கூறியுள்ளார் 
 
அதேபோல் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வெண்கலம் வென்ற லவ்லினாவுக்கு தனது வாழ்த்துக்கள் என்றும் அசாம் மாநிலத்தில் ஒரு சிறிய கிராமத்தில் இருந்து வந்து தனது போராட்ட குணத்தால் தற்போது இந்தியாவுக்கு வெண்கல பதக்கம் பெற்றுக் கொடுத்துள்ளார் என்றும் அவருக்கு மட்டுமின்றி அவருடைய அம்மாவுக்கும் எனது வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். அவருடைய இந்த வெற்றியால் ஏராளமான இந்தியர்கள் மேலும் பதக்கம் வெல்ல ஊக்குவிப்பதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்