நடந்து முடிந்த தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளில் கவனம் ஈர்த்த ஒன்று குடும்பத்தலைவிகளுக்கான 1000 ரூபாய் அளிக்கும் திட்டம். இந்நிலையில் திமுக வெற்றி பெற்று இப்போது ஆட்சியில் இருக்கும் நிலையில் அவர்களின் தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் 1000 ரூபாய் அளிப்பதற்கான அறிவிப்பு எப்போது வரும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த புதிய திட்ட அறிவிப்பால் புதிதாக ரேஷன் கார்ட்கள் விண்ணப்பிக்கும் எண்ணிக்கை அதிகமாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஒன்றாக இருந்த கார்ட்களையும் பிரித்து தனித்தனி கார்ட்களாக பிரிக்கும் விண்ணப்பங்களும் அதிகமாகியுள்ளதாம். அதோடு ரேஷன் அட்டைகளை மனைவி பேருக்கு மாற்றும் விண்ணப்பங்களும் அதிகரித்துள்ளதாம்.
இந்நிலையில் இது குறித்து உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பின்வருமாறு பேட்டியளித்தார். குடும்பத் தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் பற்றிய அறிவிப்பை முதலமைச்சர் வெளியிடுவார். இந்த திட்டத்திற்காக, ரேஷன் அட்டைகளை மனைவியின் பெயருக்கு மாற்றம் செய்ய பலர் முற்படுவதாகவும், அதற்காக இ-சேவை மையங்களில் காத்திருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.