அதிக கோல்கள் அடித்து மெஸ்ஸி சாதனை: யாரை முந்தினார் தெரியுமா?

புதன், 14 டிசம்பர் 2022 (08:31 IST)
உலகக் கோப்பையில் அர்ஜென்டினா அணிக்காக அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமையை கேப்ரியல் பாடிஸ்டுடாவை முந்தினார் லியோனல் மெஸ்ஸி.


உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று அதிகாலை நடைபெற்ற அர்ஜென்டினா மற்றும் குரோஷியா அணிகளுக்கிடையிலான போட்டியில் அர்ஜென்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றிற்கு தகுதி பெற்றது. 

இதனை அடுத்து 7வது முறையாக அர்ஜென்டினா அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அர்ஜெண்டினா அணியின் கேப்டனும் நட்சத்திர வீரரூமான மெஸ்ஸி இந்த போட்டியில் கடைசியில் அடித்த் கோல் மூலம் அணியை இறுதிச்சுற்றுக்கு கொண்டு சென்றதோடு அர்ஜெண்டினா அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மெஸ்ஸி 11 கோல்கள் அடித்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.

இந்நிலையில் இன்று மதியம் பிரான்ஸ் மற்றும் மொரோக்கோ அணிகளுக்கிடையிலான அரையிறுதி போட்டி நடைபெற உள்ளது என்பதும் டிசம்பர் 18 ஆம் தேதி இறுதி போட்டி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

முதல் முறையாக அரையிறுதிப் போட்டியில் தகுதி பெற்ற குரோஷியா அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த அணியின் கனவு தகர்ந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்