கடைசி ஓவரில் 9 ரன்கள் எடுக்க முடியாமல் ஐதராபாத் தோல்வி.. வருண் சக்கரவர்த்தி அபார பந்துவீச்சு.!

வெள்ளி, 5 மே 2023 (07:37 IST)
நேற்று நடைபெற்ற கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. 
 
முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 172 என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஹைதராபாத் அணியின் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் மட்டுமே எடுத்தது. 
 
கடைசி ஓவரில் ஒன்பது ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் வருண் சக்கரவர்த்தி மிக அபாரமாக பந்து வீசியதால் வெறும் 3 ரன்கள் மட்டுமே அந்த ஓவரில் ஹைதராபாத் அணி எடுத்தது 
 
இதனை அடுத்து ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி எட்டு புள்ளிகளுடன் எட்டாவது இடத்தில் உள்ளது என்பதும் ஹைதராபாத் அணி ஆறு புள்ளிகள் உடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்