கடந்த இரண்டு ஆண்டுகளாக சர்வதேசப் போட்டிகளில் கோலி சதமடிக்கவில்லை. அதே போல அவர் தான் தலைமை வகித்த பதவிகளில் இருந்து விலகவும், விலக்கவும் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த ஆண்டாவது தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான தொடரில் அவர் மீண்டும் தன்னுடைய பழைய பார்முக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று 5 பந்துகளை எதிர்கொண்டு ரன்னெதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். இதன் மூலம் இந்திய பேட்ஸ்மேன்களில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர் என்ற மோசமான சாதனையில் மூன்றாம் இடத்துக்கு முன்னேறியுளார். இதுவரை 14 முறை அவர் டக் அவுட் ஆகியுள்ளார். முதலிடத்தில் ஹர்பஜன் சிங்கும்(17), இரண்டாம் இடத்தில் கங்குலி(16)யும் உள்ளனர்.