ஐசிசி ஒருநாள் தரவரிசை – அசைக்க முடியாத இடத்தில் கோலி!

வெள்ளி, 11 டிசம்பர் 2020 (12:02 IST)
ஐசிசி ஒருநாள் தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் கோலி நம்பர் ஒன் இடத்தில் உள்ளார்.

ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்களின் தரவரிசையை சமீபத்தில் வெளியிட்டது. அதில் இந்திய அணியின் கேப்டன் கோலி வழக்கம் போல முதலிடத்தில் உள்ளார். அவர் 870 புள்ளிகள் பெற்று முதலிடத்திலும் ரோஹித் ஷர்மா 846 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் 841 புள்ளிகளுடன் பாபர் ஆசாம் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

பந்துவீச்சை பொறுத்தவரை நியுசிலாந்து வீரர் ட்ரண்ட் போல்ட் முதல் இடத்திலும் ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் முஜிப் உர் ரஹ்மான் 701 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர். மூன்றாம் இடத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பூம்ரா 3 ஆம் இடத்தில் உள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்