நேற்றைய நியுசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் கோட்டைவிட்டது. இதனால் மோசமான தோல்வியைத் தழுவியது. தோல்விக்குப் பின்னர் பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி உண்மையை சொல்லவேண்டுமென்றால் நாங்கள் தேவையான தைரியத்தோடு விளையாடவில்லை. ஆரம்பத்தில் இருந்தே எங்கள் உடல்மொழி சரியில்லை. ஷாட் ஆடுவதா அல்லது வேண்டாமா என்ற இரட்டை மனநிலையில் இருந்தோம்.