ஒரு வேளை மழை வந்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளித்தால் ராஜஸ்தான் அணிக்கு 17 புள்ளிகள் கிடைக்கும். ஆனால் ஹைதராபாத் அணியும் 17 புள்ளிகள் இருக்கும் நிலையில் அந்த அணி ரன் ரேட் அதிகம் வைத்திருப்பதால் ஹைதராபாத் அணிதான் இரண்டாவது இடத்தை பிடிக்கும் என்பதும் இதனால் குவாலிஃபையர் 1 போட்டியில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணி விளையாட வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.