திண்டுக்கள் டிராகன்ஸ் அணியை முட்டி தள்ளிய காரைக்குடி காளை

செவ்வாய், 8 ஆகஸ்ட் 2017 (06:08 IST)
டி.என்.பி.எல் என்னும் தமிழ்நாடு பிரிமியர் லீக் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நேற்றைய ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் காரைக்குடி காளை அணிகள் மோதின,



 
 
முதலில் பேட்டிங் செய்த காரைக்குடி காளை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தன. தொடக்க ஆட்டக்காரர் விஷால் வைத்யா 41 ரன்கள்குவித்தார்
 
இந்த நிலையில் 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 143 ரன்கள் மட்டுமே எடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த தோல்வியின் மூலம் 3வது இடத்தில் இருந்த திண்டுக்கள் 4வது இடத்திற்கு தள்ளப்பட்டது. 

வெப்துனியாவைப் படிக்கவும்