இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த படம் ”மாஸ்டர்”. கல்லூரி பேராசிரியராக விஜய் நடித்திருந்தார். விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிக்க, மாளவிகா மோகனன் மற்றும் நாசர் உள்ளிட்டவர்கள் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அனிருத் இசையில் இந்த படத்தின் முதல் பாடலான “குட்டி ஸ்டோரி” வெளியானது. நடிகர் விஜய்யே பாடிய இந்த பாடல் விஜய் ரசிகர்களால் மட்டுமில்லாமல் பலராலும் விரும்பி கேட்கப்பட்ட பாடலாக அமைந்துள்ளது.