நடந்து முடிந்த மேட்சுகளில் இங்கிலாந்தும், வங்காளதேசமும் வெவ்வேறு அணிகலுடன் இரு முறை விளையாடியிருக்கின்றன. இரண்டு அணியும் தலா ஒரு முறை மட்டுமே வெற்றி பெற்றிருக்கின்றன. இந்நிலையில் இரண்டு அணிகளும் முதல்முறையாக இன்று மோதி கொள்ளவிருக்கின்றன. உலக கோப்பையின் தொடக்க நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்ட இங்கிலாந்து 311 ரன்கள் விளாசி வெற்றியை கைப்பற்றியது. அதற்கு பிறகு 3ம் தேதி பாகிஸ்தானுடன் நடந்த மேட்ச்சில் 14 ரன்கள்(334/9) வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
தற்போது இரண்டு அணிகளுக்குமே இது மூன்றாவது ஆட்டம். இதில் யார் வெற்றிபெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக இருக்கிறது. இங்கிலாந்துக்கு 300 எடுப்பது சிரமமான காரியம் இல்லை ஆனால் வங்காளதேசத்துக்கு 250 தாண்டுவதே சிரமமான காரியமாக இருந்திருக்கிறது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டியுள்ளது. அதேசமயம் 2015ல் இருவருக்கும் இடையே நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்தை 15 ரன்கள் அதிகம் பெற்று வங்காளதேசம் தோற்கடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.