உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டு லீக் போட்டிகளில் முதல் போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இரண்டாவது போட்டியில் வங்கதேச அணியை நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது
இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 244 ரன்கள் எடுத்தது. ஷாகிப் ஹசன் 64 ரன்களும், முகமது சஃபிதின் 29 ரன்களும், சவும்ய சர்கார் 25 ரன்களும் எடுத்தனர்.
இந்த நிலையில் 245 என்ற இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி 47.1 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 248 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டெய்லர் மிக அபாரமாக விளையாடி 82 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதினை வென்றார். கேப்டன் வில்லியம்சன் 40 ரன்களும், குப்தில் மற்றும் நீஷம் தலா 25 ரன்களையும் எடுத்தனர். இதனையடுத்து இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி முதலிடத்தில் உள்ளது.