அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி 20 போட்டித் தொடருக்கான தகுதிச் சுற்று போட்டிகள் இப்போது நடந்து வருகின்றன. இதில் நேற்று அபுதாபியில் நடைபெற்ற கனடாவுக்கு எதிரான பிரிவு பி போட்டியில் யு.ஏ.இ. அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதையடுத்து யு.ஏ.இ. பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ரன்ரேட் விகிதத்தில் அதிக புள்ளிகளைப் பெற்றுள்ள அயர்லாந்து அணி நேரடியாக உலகக்கோப்பை போட்டிகளுக்குத் தகுதி பெற்றுள்ளது.