கிரிக்கெட் வீரர்களுக்கு புதிய விதிமுறைகள்.. பிசிசிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

Siva

வெள்ளி, 17 ஜனவரி 2025 (09:16 IST)
இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள வீரர்களுக்கு பிசிசிஐ விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் அனைத்து வீரர்களும் கட்டாயம் விளையாட வேண்டும் என்றும், போட்டிகளின் போது அனைத்து வீரர்களும் அணியுடன் ஒன்றாகவே பயணிக்க வேண்டும் என்றும், தனியாக பயணம் செய்யக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கிரிக்கெட் போட்டிக்காக வெளியூர் அல்லது வெளிநாடுகளுக்கு செல்லும் போது குறிப்பிட்ட அளவு உடைமைகளை கொண்டு செல்ல வேண்டும் என்றும், அதற்கு மீறி அதிகமாக உடைமைகள் இருந்தால் அதன் செலவை சம்பந்தப்பட்ட வீரரே ஏற்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மேனேஜர், சமையல் உதவியாளர் போன்ற தனிப்பட்ட நபர்களை வீரர்களுடன் அழைத்து வரக்கூடாது என்றும், பயிற்சியை முடித்தவுடன் சீக்கிரம் கிளம்ப கூடாது என்றும், அனைத்து வீரர்களுடன் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், போட்டிகள் நடைபெறும் காலத்தில் தனிப்பட்ட விளம்பர படப்பிடிப்புகள் நடத்த அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளில் தளர்வு தேவையாயின், பயிற்சியாளர், கேப்டன் மற்றும் தேர்வு குழுவின் அனுமதி பெற வேண்டும் என்றும் பிசிசிஐ வலியுறுத்தியுள்ளது.

இந்த புதிய கட்டுப்பாடுகள் அணியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்டவை என்றும், அதனால் அணியின் ஒற்றுமையும் செயல்திறனும் மேம்படும் என்றும் பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்