இன்று உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ஆணும் பெண்ணும் எப்படி சமமாகும், நிச்சயம் ஒருவரை விட ஒருவர் தாழ்ந்தவரே என்று இந்திய கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்
இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். பாலியல் வன்கொடுமை, பாலின பாகுபாடு, பாலியல் தொல்லைகள், அலுவலகத்தில் தொல்லைகள், அடக்குமுறை, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் என பெண்கள் தினந்தோறும் சந்திக்கும் பிரச்சனனகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. ஆனாலும் அனைத்து பிரச்னைகளையும் சந்தித்து கொண்டே தங்களுடைய வளர்ச்சியில் கவனம் செலுத்தி முன்னேறி வருகின்றனர். வாழ்க்கையில் பெண்கள் இன்று உன்னதமான நிலையை அடைந்து வருகின்றனர்